நாடு முழுவதும் ஒருவித வைரஸ் தொற்று பரவி வருகின்றமையினால் மிகவும் அவதானமாக இருக்குமாறு குழந்தைகள் தொடர்பான சிறப்பு நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஒரு சில நாட்களுக்கு காய்ச்சல் காணப்படுகின்ற நிலையில் அது குனமாகியதும் ஒரு சில வாரங்களுக்கு வைரஸ் தொற்று பரவுவதாகவும், அந்த வைரஸ் தொற்றின் காரணமாக உலர் அல்லது சளியுடனான இருமல் காணப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறு பிள்ளைகளிடையே இந்த வைரஸ் அதிகமாக பரவுவதனால் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு சிறுவர்கள் அழைத்து செல்லப்படுவதனை தவிர்க்குமாறு வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
உலர் அல்லது சளியுடனான இருமல் ஒரு சில வாரங்கள் தொடர்ந்தால் அது பக்டீரியா ஆபத்தினை ஏற்பட கூடும் என்பதனால் உடனடியாக வைத்திய சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.