கர்ப்பமாக இருக்கும் போது சூடான பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று சொல்வதுண்டு.
அதற்கு காரணம், உணவுப் பொருட்களை சூடாக சாப்பிடும் போது உணவுக்குழாய் புண்பட்டு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது.
கர்ப்ப காலங்களில் இப்பிரச்னை ஏற்பட்டால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும்.
* கர்ப்ப காலத்தில் நீர் வறட்சியை சமாளிக்க குளிர்ச்சியை உணவுகளை மனம் தேடும், அந்த நேரத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் சளி, இருமல் ஏற்பட வாய்ப்புண்டு.
* கர்ப்பிணிகள் சிலருக்கு உடல்பருமன் காரணமாக ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அல்லது உப்பின் அளவு, திடீரென கூடும்.
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதனை பரிசோதித்து கொள்வது அவசியம், இல்லையெனில் குறைப் பிரசவம் அல்லது கருப்பையில் குழந்தை இறந்து போதல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும்.
* கர்ப்ப காலத்தில், குழந்தையின் வளர்ச்சிக்கு தக்கவாறு, கருப்பையானது விரிவடையும். வயிற்றிலுள்ள குழந்தை அசையும் போதெல்லாம், அடிவயிற்றில் பிடிப்புடன் கூடிய வலி ஏற்படும். இது சகஜமானதே, பயப்படத் தேவையில்லை!
* பொதுவாக வயிற்றிலிருக்கும் குழந்தை, அதற்கு தேவையான சத்துக்களை தாயிடமிருந்து உறிஞ்சிக் கொள்ளும். இதனால் தாயின் உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டு, சில நேரங்களில் மயக்கம் வருவது போல் தோன்றும்.
* மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். தாயின் மூச்சுக் காற்று அளவு குறையும்போது, அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான், கர்ப்பிணிகளை ஒருக்களித்த நிலையில் படுக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.