Loading...
மூத்த பத்திரிகையாளரும், துக்ளக் ஆசிரியருமான சோ.ராமசாமி காலமானார். அவருக்கு வயது 82.
மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.40 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. சோ.ராமசாமி காலமானதை அவரது மருத்துவர் விஜயசங்கர் உறுதிப்படுத்தி உள்ளார்.
சோ.ராமசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவார். தான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் ஜெயலலிதா காலமானது சோவுக்கு தெரியாது.
Loading...