ஆண்கள் அளவுக்கு அதிகமாக எடை போடுவது மற்றும் குண்டாக இருப்பது இவையெல்லாம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைக்கிறதாம். அதனால் ஆண்கள் அளவுக்கு அதிகமாகவும் அல்லது குறைவாகவும் உடல் எடை போட கூடாது.
இனப்பெருக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் உறுப்புகள் நன்கு செயல்பட வேண்டுமெனில் ஆரோக்கியமான டயட் மற்றும் உடல் எடை பிட்டாக இருக்க வேண்டும். தினமும் உடலை நன்கு பிட்டாக வைத்திருக்க வேண்டும். இதற்கு தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.
மேலும் சில தகவல்கள் – ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன்காலையில் தினமும் மென்று தின்று பசும்பால் அருந்திவர ஆண்களின் பலவீனங்கள் சரியாகும். மேலும் முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து தினமும் குடிக்கலாம்.
ஆண்மை சக்தி பெருக அத்திப்பழத்தை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து உண்ணலாம், முருங்கை கீரை தவசி கீரை வகைகளை வராம் ஒரு முறையாவது உணவில் சேர்க்கலாம். மாதுளம் பழத்தை தினமும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினமும் சாப்பிட்டு வரலாம்.
ஆரோக்கிய மற்றும் பாலுணர்வை ஆண்மையைத் தூண்டும் நல்ல உணவுகளான சீஸ், சிக்கன், ஓட்ஸ், கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், கேரட், மிளகு, முக்கியமாக மீனில் சாலமனை சாப்பிட வேண்டும்.