Loading...
பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமாசாமி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலை காலமானார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் :
தமிழகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நகைச்சுவை கலந்து எழுதக் கூடிய அரசியல் விமர்சகருமான நண்பர் சோ ராமசாமி இன்று காலை மறைந்து விட்ட செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக் கிடையிலும் என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Loading...