அவுஸ்திரேலியாவுக்கு வாழ்க்கை தேடி சென்ற ஒரு இளம் ஜோடி, தீவு ஒன்றில் சிறை வைக்கப்பட்டு, மனைவி கர்ப்பிணியாக ஒரு புறம், கணவன் தனிமையாக ஒரு புறம் என தவித்த நிலையில், கனடா அவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது, ஏன்,வாழ்வளித்திருக்கிறது என்றே கூறலாம்.
மூன்று வருடங்களுக்கு முன் டிமா என்ற பாலஸ்தீனிய அகதி, பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியானார்.
வாழ்க்கை தேடி ஹானி என்பவருடன் அவுஸ்திரேலியா செல்ல முடிவெடுத்த டிமா தேர்ந்தெடுத்தது, படகுப்பயணத்தை. ஆனால், படகில் செல்பவர்களை அவுஸ்திரேலியா கைது செய்து ஏதாவது ஒரு தீவில் சிறை வைத்துவிடும் என்பது அவர்களுக்கு தெரியாது போலும்.
ஆக, வாழ்க்கை தேடி வந்த டிமாவும், அவரது கணவராகிவிட்ட ஹானியும் Nauru தீவில் சிறை வைக்கப்பட்டார்கள்.
பட்ட காலிலேயே படும் என்பதுபோல, கர்ப்பமுற்ற டிமாவுக்கு பிரச்சனைகள் இருந்தன. சிசேரியன் செய்யப்படுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு திரும்பவேண்டிய சூழல் ஏற்பட, முதலில் டிமாவை அனுப்ப மறுத்த Nauru நிர்வாகம், கடைசியாக அவரை மட்டும் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப, அவரது கணவர் ஹானிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கணவர் ஒருபக்கம், கடினமான பிரசவம், குழந்தையுடன் டிமா மறுபக்கம் என குடும்பம் சோகத்தில் தவித்து நிற்க, கனடா அரசு கைகொடுத்தது.
கனடா அரசின் ஸ்பான்சர்ஷிப் திட்டம் ஒன்றின்கீழ் டிமா, அவரது கணவர் ஹானி மற்றும் தம்பதியின் குழந்தை முகமது ஆகியோர் கனடாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
வாழ்வு என்னாகுமோ என கலங்கி நின்ற குடும்பத்திற்கு கனடா வாழ்வளித்திருக்கிறது. தற்போது கனடாவில் ரொரன்றோவில் டிமா குடும்பத்திற்கு நிரந்தர வாழிட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவுஸ்திரேலியாவில் மகனுடன் தவித்த டிமாவும், தனியாக சிறையில் வாடிய ஹானியும் கனடாவில் இணைந்திருக்கிறார்கள்.
அத்துடன், அவர்கள் தங்களுக்கென ஒரு வேலையைத் தேடிக்கொள்ளூம்வரையில், அவர்களுக்கு ஸ்பான்சர் செய்தவர்கள் குறிப்பிட்ட தொகையயும் உதவிக்கு வழங்குவதால் அவர்கள் இப்போதைக்கு செய்ய வேண்டியதெல்லாம் வேலை தேடிக்கொள்வதுதான்.