தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின், நடவடிக்கை குழுவின் உறுப்பினரான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழு நிலை விவாதத்தில் நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை பிரச்சினையை ஒன்றை எழுப்பி கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், என்னையும், எனது குடும்பத்தையும் கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இது குறித்து தான் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலக்கரி விலை மனு கோரல் சம்பந்தமாக ஆராய விசேட தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
மின் வலு சக்தி, கனிய எண்ணெய் வளம், பெட்ரோலிய வாயு, அரச பாதுகாப்பு மற்றும் சர்வதேச வர்த்தக விவகார அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று நடைபெறுகிறது.