Loading...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனதிபதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மலேசியாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்நாட்டு அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
Loading...
மேலும் மலேசிய அரசாங்கத்துடன் 6 உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட உள்ளன.
சுற்றுலா தொழிற்துறை, பயிற்சி பரிசோதனை, அரச நிர்வாகத்துறை, கலை,கலாச்சாரம், இளைஞர் அபிவிருத்தி போன்ற துறைகளில் இரண்டு நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட உள்ளன.
Loading...