விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் துப்பாக்கி அன்று நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருந்த போது எந்த ஒரு அமைச்சர்களும் கருத்துகளை வெளிப்படுத்தவில்லை.
எனினும், தற்போது வீன் வாதங்களை வெளிப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
வரவு – செலவு திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இனத்தினை பற்றி பேசுவது தவறான விடயம் அல்ல. எனினும், இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்கள் வெளியிடுவது பாரிய தவறாகும்.
நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் பொலிஸார் நேரடி தலையீடுகளை செய்ய வேண்டும் எனவும் அவர் இதன் போது வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தை பிரகடனப்படுத்தியதை இட்டு நாங்கள் பெரும் சந்தோஷம் அடைகின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தன்னிடம் கூறியதாகவும் அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் அப்போதுதான் தமிழீழத்தை விரைவில் பெற்றுக்கொள்ளலாம் எனவும், மாவிலாறு யுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றில் வைத்து இரா.சம்பந்தனை சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியதாக கெஹலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்தார்.