எலுமிச்சை மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதன் தோலிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளது. சொல்லப்போனால், நம் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் பல நோய்களை விரட்டியடிக்கும் குணங்கள் உள்ளது.
உறைய வைக்கப்பட்ட எலுமிச்சை:
எலுமிச்சையின் தோலை சாப்பிட சிறந்த வழி, அதை நீரில் கழுவி, நன்கு துடைத்து, பின் ஃப்ரீசரினுள் வைத்து உறைய வைத்து, பின் அதனை துருவிக் கொள்வது தான். எலுமிச்சையின் தோலில் தான் ஏராளமான ஆர்கானிக் உட்பொருட்கள் உள்ளது.
ஏராளமான ஊட்டச்சத்துக்கள்:
எலுமிச்சையிலேயே அதன் தோலில் தான் 5-10 மடங்கு அதிகமான வைட்டமின்களும், இதர நன்மைகளும் அடங்கியுள்ளன. குறிப்பாக எலுமிச்சையின் தோலில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. அதோடு ஃபோலேட், காசியம், காப்பர், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், பொட்டாசியம், புரோட்டீன், ரிபோஃப்ளேவின், நியாசின் போன்றவை உள்ளது.
இதர சத்துக்கள்:
எலுமிச்சை தோலில் ப்ளேவோனாய்டுகள் மற்றும லைமோனாய்டுகள் உள்ளன. இவை நாள்பட்ட தொடந்தரவான நோய்களை எதிர்த்துப் போராடி, உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.
நன்மைகள்:
உறைய வைக்கப்பட்ட எலுமிச்சை தோல் பல்வேறு வகையான புற்றுநோய் கட்டிகள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், அதிகமான அமில சுரப்பு, அடிக்கடி காய்ச்சல் வருவது போன்றவற்றை தடுப்பதோடு, உடல் எடையையும் குறைக்கும். மேலும் எலுமிச்சையின் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம், கிருமிகளை எதிர்த்துப் போராடி, உடலையும் சருமத்தையும் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளும்.
எப்படி உட்கொள்வது?
உறைய வைக்கப்பட்ட எலுமிச்சையின் தோலை துருவி, பின் அதனை பிடித்த உணவுகளின் மீது சிறிது தூவி சாப்பிட, உடலில் ஏற்படும் பல நோய்கள் தடுக்கப்படும்.