பெண்கள் தங்களுக்கு ஏற்படும் அந்தரங்க பிரச்சனைகளை மருத்துவரிடம் சொல்லக் கூட தயங்குவார்கள். அந்தரங்க உறுப்பு மிகவும் சென்சிவ்வானது. அங்கு ஏதேனும் பிரச்சனைகளை சந்தித்தால், அதை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாக பல தீவிர விளைவை சந்திக்க வேண்டியிருக்கும்.
பெண்களே! உங்களுக்கு பல நாட்கள் அல்லது வாரமாக அந்தரங்க உறுப்பில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இயற்கை வழிகளை முயற்சியுங்கள். ஒருவேளை இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கிடைக்காவிட்டால், மருத்துவரை சந்தித்து அதற்கான முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.
சரி, இப்போது பெண்களின் அந்தரங்க உறுப்பில் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல்களைப் போக்கும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
தயிர் சிறிது தயிரை எடுத்து, காட்டன் பயன்படுத்தி, அந்தரங்க உறுப்பில் தடவி1 மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி சில நாட்கள் செய்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, அரிப்பு மற்றும் எரிச்சல்களில் இருந்து உடனடி நிவாரணத்தை வழங்கும். தினமும் தயிரை உட்கொண்டு வந்தாலும், அந்தரங்க உறுப்பில் நல்ல பாக்டீரியாக்கள் தக்க வைக்கப்பட்டு, கெட்ட பாக்டீரியாக்களின் தாக்கம் தடுக்கப்படும்.
ஆப்பிள் சீடர் வினிகர் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1 கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அந்த நீரைக் கொண்டு தினமும் 2-3 முறை அந்தரங்க உறுப்பை கழுவி வர, அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும்.
டீ-ட்ரீ ஆயில் 4-6 துளி டீ-ட்ரீ ஆயிலை குளிக்கும் டப்பில் இருக்கும் நீருடன் சேர்த்து கலந்து, அந்நீரில் 10 நிமிடம் அமர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம். இல்லாவிட்டால், 1-2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், 4-5 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, அந்தரங்க உறுப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் தடவி வர, அரிப்பு மற்றும் எரிச்சல் தடுக்கப்படும்.
சீமைச்சாமந்தி 1-2 கப் சுடுநீரில், 1-2 சீமைச்சாமந்தி டீ பை ஊற வைத்து, பின் அந்நீர் வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், சிறிது டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, அந்தரங்க உறுப்பை கழுவி வர, அரிப்பு மற்றும் எரிச்சல் நீங்கும்.
போரிக் அமிலம் 1/4 டீஸ்பூன் போரிக் அமிலப் பொடியை, 1 கப் நீரில் கலந்து, அந்நீரால் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை போரிக் அமில நீரால் அந்தரங்க உறுப்பைக் கழுவி வந்தால், அவ்விடத்தில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படும்.
பூண்டு பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-பயாடிக் தன்மை அதிகம் உள்ளது. அந்த பூண்டின் ஒரு பல்லை நீளவாக்கில் இரண்டாக வெட்டி, அந்தரங்க உறுப்பில் வைத்து, 2-3 மணிநேரம் கழித்து நீக்கிவிட வேண்டும். இதனால் சீக்கிரம் அந்தரங்க உறுப்பில் இருக்கும் நோய்த்தொற்றுக்கள் அழிக்கப்படும்.
தேங்காய் எண்ணெய் அந்தரங்க உறுப்பில் தினமும் தேங்காய் எண்ணெயை பலமுறை தடவி வந்தாலும், அரிப்பு மற்றும் எரிச்சல் தடுக்கப்படும். இல்லாவிட்டால், சிறிது பூண்டு எண்ணெயுடன், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, யோனியில் தடவுவதன் மூலமும் நிவாரணம் கிடைக்கும்.
வேப்பிலை ஒரு கையளவு வேப்பிலையை 3-4 கப் நீரில் போட்டு 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்நீரால் தினமும் 1-2 முறை அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.