Loading...
நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி அதிகாலை முதல் வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு வாய்ந்த நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள், அபிஷேகம் ஆகியவை நடந்து வருகிறது. கோவிலுக்கு தினமும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
Loading...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 26-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, கிரீடம் தாங்கிய அலங்கார வாகன ஊர்வலம் ஆரன்முளை பார்த்தசாரதி கோவிலில் இருந்து 22-ந் தேதி புறப்படுகிறது.
Loading...