நவீன காலத்துக்கு பொருத்தமான, தரம் வாய்ந்த இராணுவமாக எமது இராணுவத்தை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நவீன ரக யுத்த விமானங்களை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இலங்கை இராணுவும் பலவீனப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையிலேயே பிரமர் இதனைக் கூறினார்.
கடந்த யுத்த காலத்தில் உக்ரைனிலிருந்து துருப்பிடித்த யுத்த விமானங்களையே அக்கால அரசாங்கம் கொள்வனவு செய்தது. யுத்தம் செய்வதற்கு சிறந்த நவீன போர் விமானங்களை அவ்வரசாங்கம் பெற்றுக் கொடுக்க வில்லை.
தற்பொழுது எமது இராணுவத்தினர் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையில் கலந்துகொள்கின்றனர். முன்னர் என்ன நடந்தது, ஐ.நா. காரியாலயத்தின் முன்னால் சத்தியாக்கிரகம் செய்தனர். இரவு நேரத்தில் அவ்வாறு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகள் கோழி இறைச்சிச் சாப்பாடு உண்டனர் எனவும் பிரதமர் மேலும் கூறினார்.