பிரான்சில் புதிதாக ஒரு குழுவினருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் சுகாதரத்துறை அமைச்சர், அதை கொண்டு வந்தது ஒரு பிரித்தானியர் என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஜனவரி 20 முதல் 23வரை தங்கியிருந்த அந்த பிரித்தானியர், 24ஆம் திகதி பிரான்ஸ் வந்துள்ளார்.
அந்த பிரித்தானியரிடமிருந்து நான்குபேருக்கு வைரஸ் தொற்று பரவியதாக அமைச்சர் தெரிவித்தார். அவர்களில் ஒரு குழந்தையும் அடக்கம்.
அவர்கள் அனைவரும் தற்போது பிரான்சின் கிழக்கு Haute-Savoie ஆல்ப்ஸ் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், அவர்கள் அனைவரின் உடல் நிலையும் சீராக உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனைகளில் அவர்களது நிலைமை மோசமானதாக இல்லை என தெரியவந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அந்த பிரித்தானியரின் உறவினர்களை தொடர்பு கொள்ளும் முயற்சியில் பிரான்ஸ் அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தெரிவித்தார்.