பிரான்சில் தற்போது புதிததாக ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளையும் மிரட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக பிரான்சில் கொரோனாவின் பாதிப்பு இருப்பதால், பிரான்ஸ் அரசு உன்னிப்பாக இதை கண்காணித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பிரான்சில் புதிதாக மேலும் ஐந்து பேருக்கு கொரோனாவின் பாதிப்பு இருப்பதாக, சுகாதார துறை அமைச்சர் Agnes Buzyn தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், பிரான்சில் தற்போது 5 பேருக்கு புதிததாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிரித்தானியாவை சேர்ந்தவர்கள் எனவும், அதில் குழந்தை ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து இந்த வைரஸ் இவர்களுக்கு பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது கிழக்கு பிரான்சில் சவோய் என்ற மலைப்பிரதேசத்தில் இருக்கும் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் இருப்பதாகவும், ஆனால் அவர்கள் யாருக்கும் எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் பிரான்சில் தற்போது 11 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்துள்ளது. கடந்த 20-ஆம் திகதி முதல் 23-ஆம் திகதி வரை சிங்கப்பூரில் தங்கியிருந்த பிரித்தானியா நட்டவர் கடந்த 24-ஆம் திகதி பிரான்சிற்கு வந்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு சோதனை செய்யப்பட்டதன் பின்னரே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மனிதர்களிடமிருந்து இந்த நோய்(இருமல், தொடுதல்) எளிதாக பரவுவதால், அடுத்தடுத்து தாக்கும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.