இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 1 டன்னிற்கும் அதிகளவான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கமைய வடக்கு கடற்படை கட்டளை பிரிவு ஊடாக 890 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடமேல் கடற்படை கட்டளை பிரிவு ஊடாக 181 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2019 ஆண்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது 3.4 டன்னிற்கும் அதிகளவான கேரள கஞ்சா தொகையை கடற்படை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தற்போது இளைஞர்கள் சிறுவயதிலேயே கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி தமது வாழ்க்கையை தாமே அழிக்கின்றனர். இது நல்ல விடயம் அல்ல.
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் இளைஞர்கள் இவ்வாறு தவறான பாதையில் செல்வது ஆரோக்கியமான விடயமல்ல.
ஸ்ரீலங்காவில் தற்போது கஞ்சா பாவனை அதிகரித்துள்ள நிலையில் தினம் தினம் கிலோ கணக்கில் கஞ்சா கைப்பற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.