தாய்லாந்து வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய கொலைகாரன் கொல்லப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்தில் உயிரை கையில் பிடித்து கொண்டு பதுங்கியிருந்த பெண் திக் திக் நிமிடங்களை விளக்கியுள்ளார்.
தாய்லாந்தின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே இராணுவ மேஜர் ஜக்ராபந்த் தோமா பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இதில் 21 பேர் பலினார்கள், வணிகவளாகத்தில் பலர் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்து, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு பிறகு தாக்குதலில் ஈடுபட்ட இராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, பிணைகைதிகளாக இருந்தவர்களை மீட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவர் தான் உயிர் பிழைக்க போராடிய நிமிடங்கள் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், நானும் சிலரும் வணிகவளாகத்தின் நான்காம் மாடியில் உள்ள கழிப்பறைக்குள் சென்று ஒளிந்து கொண்டோம்.
பின்னர் இரண்டாம் மாடிக்கு வந்து அங்குள்ள உணவகத்தின் டேபிளுக்கு அடியில் ஒளிந்து கொண்டு துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க போராடினோம்.
பின்னர் தான் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து எங்களை பத்திரமாக மீட்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகளை பார்த்த பின்னர் தான் நிம்மதியடைந்தேன், அதற்கு முன்னர் பலமுறை துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது பெரும் பயத்தை ஏற்படுத்தியது என கூறியுள்ளார்.