சார்ஸ் வைரஸ் தாக்கத்தினால் பலியானவர்களை விட கொரோனாவின் தாக்கதால் பலியானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
கொரோனா வைரஸின் மையப் பகுதியான சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 780 என்று அந்நாட்டு சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
மொத்தத்தில் இதுவரை இந்த நோய்க்கு 803 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் சீன பெரு நிலப்பரப்பிலும், ஹொங்ஹொங்கிலும் இறந்துள்ளனர்.
2003ஆம் ஆண்டு சுமார் இரண்டு டஜன் நாடுகளில் சார்ஸ் வைரஸ் எனப்படும் தீவிர சுவாசக் கோளாறு நோய் தாக்கியதால் 774பேர் கொல்லப்பட்டனர்.
தற்போது உலக அளவில் 34, 800பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கை சீனாவிலேயே நிகழ்ந்துள்ளது.
இந்த நோய்யின் பரவலால் உலக சுகாதார அவசர நிலை என்று கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
ஹுபேய் மாகாணத்தில் சனிக்கிழமை மட்டும் 81பேர் இறந்ததாக சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து கண்டறியபடாதது பலி எண்ணிக்கையை அதிகரிக்க கூடும் என்று அச்சம் எழுந்துள்ளது.