சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சிலவற்றை செய்ய வேண்டும். சிலவற்றை கண்டிப்பாக செய்யக்கூடாது. அவை என்னவென்று பார்க்கலாம்.
செய்ய வேண்டியது :
* மலையேற்றத்தின் போது 10 நிமிடம் நடங்கள். 5 நிமிடம் ஓய்வு எடுங்கள்.
* பாரம்பரிய பாதையான மரக்கூட்டம், சரம்குத்தி, நடபந்தல் வழியாக செல்லுங்கள். வேறு பாதை வேண்டாம்.
* பதினெட்டாம் படி ஏறும் போது முண்டியடிக் காதீர்கள். பொறுமையாக வரிசையில் நின்று செல்லுங்கள்.
* யாத்திரை முடிந்து திரும்பும் போது நடைபந்தல் பாலத்தை பயன்படுத்தவும்.
* மலையில் சிறுநீர் கழிக்க கழிவறைகளை பயன்படுத்துங்கள்.
* பம்பையில் இருந்து புறப்படும் முன்பு சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் கூட்டத்தை அறிந்து கொள்ளுங்கள். இது உங்களது ஆத்மார்த்தமான வழிபாடுக்கு உதவும்.
* டோலி பயன்படுத்தினால் தேவஸ்தான கவுண்டரில் பணம் செலுத்தி ரசீசை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் முழு ஒத்துழைப்பு கொடுங்கள்.
* ஏதாவது உதவி தேவைப்பட்டால் போலீசை அணுகுங்கள்.
* சாமியார்கள் போர்வையில் யாராவது சந்தேகப்படும்படி நடந்து கொண்டால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.
* உரிமம் பெற்ற கடைகளில் மட்டுமே உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடவும்.
* பம்பை, சன்னிதானம் மற்றும் மலையேறும் பாதைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* வாகனங்களை அவற்றுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நிறுத்துங்கள்.
* கழிவுகளை, குப்பைத் தொட்டிகளில் போடுங்கள். இதனால் சுற்றுச் சூழலில் மாசு ஏற்படாது.
* தேவைப்படும் பட்சத்தில் ஆங்காங்கே உள்ள மருத்துவ மையங்களை தயங்காமல் நாடி பயன்படுத்தி கொள்ளுங்கள்.
* சிறுவர்கள், முதியவர்களிடம் அவர்களது பெயர், முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகிய விபரம் கொண்ட அடையாள அட்டையை கொடுத்து வையுங்கள். அதை அவர்கள் எப்போதும் கழுத்தில் அணிந்திருப்பது நல்லது.
* உங்கள் குழுவில் இருந்து பிரிந்து விட்டால், உடனே போலீசாரிடம் உதவி கேட்டு பெறுங்கள்.
* ஐதீகம் என்ற பெயரில் சபரிமலையில் எதையும் போட்டு விட்டு வராதீர்கள். சன்னிதானத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால் ஐயப்பன் அருளை மேலும் பெறலாம்.
செய்யக் கூடாதவை :
* சபரிமலை கோவில் வளாகத்துக்குள் செல்போன் பேசுவதை தவிருங்கள்.
* மாலை அணிந்துள்ள நாட்களில் புகை பிடிக்காதீர்கள். மலையேறும் போது புகை பிடிப்பதை கண்டிப்பாக கைவிட்டு விட வேண்டும்.
* பம்பை மற்றும் வழிநடை பகுதிகளில் மது அருந்துவது மன்னிக்க முடியாத குற்றமாகி விடும்.
* வரிசையில் சென்று கொண்டிருக்கும் போது விலகி ஓடாதீர்கள்.
* மலையேறும் போது வெடிப்பொருட்களை எடுத்துச் செல்லாதீர்கள்.
* அதிகாரப்பூர்வமற்ற கடைக்காரர்களிடம் எதையும் வாங்காதீர்கள்.
* சிறுநீரை கண்ட இடங்களில் கழிக்காதீர்கள்.
* எந்த ஒரு சேவைக்கும் கூடுதல் கட்டணம் கொடுக்காதீர்கள்.
* எந்த உதவி தேவைப்பட்டாலும் போலீசாரை அணுக தயங்காதீர்கள்.
* கழிவுப் பொருட்களை குப்பைத் தொட்டி தவிர வேறு எங்கும் போடாதீர்கள்.
* பதினெட்டாம் படியில் தேங்காய் உடைக்காதீர்கள்.
* மேல் திருமுற்றம் பகுதியில் எங்கும் தங்கி ஓய்வு எடுக்காதீர்கள்.