ஜெயலலிதா என்றவுடனேயே பலர் மனதில் பயமும், அனைவர் மனதில் “அம்மா” என்ற வார்த்தையும் தான் ஞாபகத்திற்கு வருகின்றது.
இவரை பற்றிய வாழ்க்கை குறிப்புகள், வரலாறு இவை அனைத்தும் அனைவரும் அறிந்ததே. ஆகவே நாம் புதிதாக எதுவும் சொல்லிவிடப்போவதில்லை.
அவர் இன்று இந்த உலகில் இல்லை! உண்மையான அன்பு கொண்ட உள்ளங்களின் கண்ணீருடன் இந்த உலகை விட்டு விடைபெற்று இரண்டு நாட்கள் கடந்து விட்டது.
ஆனாலும் பலரின் மனதில், பல கேள்விகள்???
சமூக ஊடகங்கள், ஊடகங்கள் என எந்த பக்கம் திரும்பினாலும் அம்மா ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல உண்மைகள், பல வதந்திகள், பொய்கள் பல பரவி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
ஒற்றை விரல் அசைவில், ஒட்டுமொத்த கூட்டத்தையும் மண்டியிட வைக்க, அளவில்லா ஆளுமை திறமையும் வேண்டும். அந்த திறமைக்கும் ஆளுமைக்கும் இனி வேறு யாராவது பிறந்து தான் வரவேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் புதிய புதிய விடயங்கள் சமூக ஊடகங்களிடையே பரவி வருதை பார்த்தால் சிந்திக்க தூண்டுகின்றது.
ஆனால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும் சட்ட திட்டங்கள், கடைபிடிப்புகள் என்பவற்றை ஓரளவேணும் தெரிந்து வைத்து கொண்டால் அதுவே போதும். பொய்கள் எம்மிடையே பரவாது.
ஆனால், அவரின் மறைவின் பின் அனைவர் மத்தியிலும் எழுந்த சில சந்தேகங்களுக்காக விளங்களை சற்று அலசினால் கேள்விகுறியாகவே இருக்கின்றது.
ஆரம்பத்திலிருந்து வருவோம்…
1.ஜெயலலிதா கடந்த 75நாட்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் யாரையுமே பார்க்க அனுமதிக்காதது ஏன்?
2.அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவது போல் போலியான புகைபடங்கள் வெளியானது ஏன்?
3.நவம்பர் 27ஆம் திகதி அம்மா சாப்பிடுகின்றார். பிசியோதெரபிகள் இடம்பெறுகின்றன. இனி வீடு திரும்புவார் என வைத்தியசாலை அறிக்கை வெளியானது. இது எந்தளவு உண்மை?
4.தமிழச்சியின் அறிக்கை உண்மையானதா?
5.நரேந்திர மோடியின் பேஸ்புக் இரங்கல் செய்தியில் நேரம், நாள் மாறியது எவ்வாறு?
6.இரத்த உறவுகள் இருந்த போதும் சசிகலா ஏன் இறுதி கிரிகைகளை செய்யவேண்டும்?
7.சொத்து வழக்கு, சொத்துக்கள் விபரம், யார் யாருக்கு சொத்துக்கள் சேரும்?
8.வைத்தியசாலையால் அளிக்கப்பட்ட அறிக்கையும், ஜெயலலிதா இறந்த நேரமும் எப்படி ஒரே நேரமானது?
9.முதலில் இறந்து விட்டதாக செய்தி வெளியானது பின் ஏன் மறுக்கப்பட்டது?
10.அல்லது சசிகலாதான் கொலை செய்தாரா?
இப்படி தான் ஊடகங்கள் வாயிலாக பல கோணங்களில் பார்க்கப்படுகின்றது ஜெயலலிதாவின் மரணம். ஆனால் உண்மையிலேயே என்ன நடந்திருக்கலாம்?
5ஆம் திகதி ஜெயலலிதா கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மாலை நேரம் ஆனதும் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியர்களின் தகவல் வெளியானது.
ஆனால், குறித்த தகவலுக்கமைய பார்த்தால், அவர் மாலை 05.30 மணியளவில் இறந்திருக்க வேண்டும்.
இருந்த போதிலும் மக்களிடையே ஏற்படும் பதற்றம், ஆயத்தமற்ற நிலை என்பன அறிவிப்பதற்கு தாமதமாகியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னால் தான் பாரிய விளையாட்டு ஒன்று விளையாடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அதனடிப்படையில் சமூக ஊடகத்தில் இவ்வாறான வதந்திகளையும் பொய்களையும் கண்ட ஒரு சமூக ஆர்வலர் ஒரு மாநில முதல்வரின் இறப்பின் பின் இருந்த பாரிய ஒரு முடிச்சை அவிழ்த்துவிட்டார்.
“ஒரு மாநிலத்தின் முதல்வர் மரணம் அடைந்தால் அதை வெளியிடுவதற்கு என்று இந்திய அரசியல் சாசனத்தில் Indian constitutional law சில அறிவுறுத்தல்கள் இருக்கின்றன.
இது சட்டம் ஒழுங்கு சம்மந்தபட்ட விடயம். ஒரு மாநில முதல்வர் இறப்பு உறுதி செய்யப்பட்டவுடன் அந்த மாநில ஆளுனர் அதை உறுதி செய்ய வேண்டும், பின் அந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும் , பிரதமர் அந்த தகவலை குடியரசு தலைவருக்கு தெரியப்படித்துவார், மத்திய அரசின் வழிகாட்டுதலோடு புதிய பொறுப்பு முதல்வரை தேர்ந்தடுத்து, மாநில சட்டம் ஒழுங்கை உறுதி செய்துக்கொண்ட பிறகு மத்திய அரசின் அனுமதியோடு நள்ளிரவு அல்லது விடியற்காலை ஆளுநர் முறையாக தகவலை மக்களுக்கும் ஊடகத்திற்கும் அறிவிப்பார்.
இதுதான் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் மறைவின் பொழுதும் நடந்தது…”
இந்த விடயத்தில் தான் முழு மர்மமும் அவிழ்த்துவிடப்படுகின்றது.
அந்த 5.00 மணியிலிருந்து இரவு 11.30 வரையிலான ஐந்து மணித்தியாலங்களும் இந்த படிமுறையே நடந்திருக்ககூடும்.
இதனால் தான் ”உத்தியோகபூர்வமாக” அறிவிக்க முடியாமல் போனதோ தெரியவில்லை.
ஆனால் இது நரேந்திர மோடியின் பேஸ்புக் பதிவின் மூலம் வெளிப்படையான உண்மையாகிபோனது.
காரணம் அவர் வைத்தியசாலையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் முன் தனது பேஸ்புக் பக்கத்தில் இரங்கல் வெளியிட்டிருந்தார்.
இதிலேயே தெரிந்து விட்டது. என்ன நடந்திருக்கும் என்பது.
ஆனாலும் அந்த 75 நாட்கள் பற்றிய விளக்கமும் தெளிவும் வைத்தியசாலையினாலும் தோழி சசிகலாவும் வாயை திறந்தால் மாத்திரமே வெளிப்படும் ஒரு விடயமாகும்.
எனினும் தோழி சசிகலாவின் முகத்தில் கவலையை பார்க்க முடியவில்லை. அவர் தனது உறவினர் மத்தியில் ஜெயலலிதா எப்படி இறந்தார் என நடித்து காட்டும் வீடியோவும் தற்போது சமூக வளைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலாக பரவி வருகின்றது.