கெரோனா வைரசினால் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி உள்ள சீனாவின் வூகான் மாநிலத்தில் வாழ்ந்து வந்த சுமார் 5 மில்லியன் சீனர்கள் திடீரென்று மாயமாகிவிட்டதாக வூகான் மாகான அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
சர்வதேச ஊடகமாக ஏ.பீ. செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் வூகான் மாநிலத்தில் மிகவேகமாகப் பரவி பலநூறு பேரைக் கொலை செய்து, பல ஆயிரம் மக்களிடையே பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, வூகான் பிரதேச எல்லைகளை மூடும் நடவடிக்கையில் இறங்கியிருந்தது சீன அரசாங்கம்.
கடந்த ஜனவரி மாதம் 23ம் திகதி சீனாவின் வூகான் பிரதேச எல்லைகளை மூடியிருந்தார்கள் சீன அதிகாரிகள்.
ஆனால், அதற்கு முன்னரேயே சுமார் ஐந்து மில்லியன் பேர் வுகான் பிராந்தியத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக தற்பொழுது அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள்.
அவர்கள், காடுகள், கிராமங்கள் வழியாக வூகான் பிரதேசத்தில் இருந்து வெளியேறி அயல் மாநிலங்களுக்கும் சீனாவின் வேறு பிரதேசங்களுக்கும் சென்றிருக்கலாம் என்று கூறுகின்றது சீனாவின் வூகான் நகராட்சி அலுவலகம்.
இவ்வாறு வெளியேறிய 5 மில்லியன் மக்களும் கொரோனா பாதிப்புக்கு நேரடியாக உள்ளாகாமல் இருந்தாலும், அவர்கள் ஊடாக கொரோனா கிருமிகள் வேறு மாநிலங்களுக்கு கடத்திச் செல்லப்படும் சாத்தியம் இருப்பதாக எச்சரித்துள்ளது சீன நாட்டின் சுகாதாரத்துறை.
சினாவின் வவூகான் மாநிலம் என்பது மொத்தம் 38 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட ஒரு பிரதேசம்.
கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டால் இத்தனை பேரின் நிலை கேள்விக்குறியாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அப்படி இருக்க, அந்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகின்ற 5 மில்லியன் மக்களும் கொரோனா வைரஸ் காவிகளாகச் செயற்பட்டால், ஒட்டுமொத்த சீனாவின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் மிகப் பெரிய அபாயம் காணப்படுகின்றது என்று கூறுகின்றார்கள் மருத்துவ நிபுனர்கள்.