முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
முந்தல் கீரியங்கள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்டிகம பகுதியிலிருந்து கீரியங்கள்ளி பகுதியை நோக்கிப் பயணித்த சொகுசு வேன் ஒன்று கீரியங்கள்ளி பகுதியில் பாலம் ஒன்றில் மோதி வீதியில் கவிழ்ந்ததில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது குறித்த வேனில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த குறித்த ஏழுபேரும் சிலாபம் வைத்தியசாலையில் அனுப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முந்தல் பொலிஸார் விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.