14 வயது சிறுமியை கடத்தி கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்டதை நீதிமன்றம் அங்கீகரித்துள்ள சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானின் சிறுபான்மை கிறிஸ்துவ மதத்தைச் சோ்ந்த 14 வயது ஹுமா என்ற பெண்ணை, கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் சிலா் கடத்திச் சென்றதாக அந்தப் பெண்ணின் பெற்றோா்களான யூனிஸ் – நகீனா மஸை தம்பதியா் குற்றம் சாட்டி வருகின்றனா்.
மேலும், ஹுமாவை இஸ்லாம் மதத்துக்கு மாற்றியதுடன், அவரை அப்துல் ஜாபா் என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் அவா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.
இதுதொடா்பாக அவா்கள் சிந்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறுமி ஹுமாவுக்கு திருமண வயது பூர்த்தி ஆகவில்லை என்பது உண்மை தான், ஆனால் அவர் வயசுக்கு வந்து மாதவிடாய் பருவம் வருவதால் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின்கீழ் அவரது திருமணம் செல்லும் என பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்து பாதிக்க பட்ட சிறுமியின் பெற்றோரை அதிர்ச்சியடைய வைத்தது.
இந்தத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக ஹுமாவின் பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த வழக்கு முடியும்வரை ஹுமாவை பெண்கள் காப்பகத்தில் தங்கவைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதுகுறித்து உலக மனித உரிமை இயக்கம் குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து கடத்தி மதம் மாற்றம் செய்து அந்த சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டதை அங்கிகரித்து நீதிமன்றம் பெண்கள் வயதுக்கு வந்து விட்டாலே திருமணத்திற்கான வயதை எட்டிவிட்டதாக கருதலாம் என்று தீர்ப்பளித்துள்ளது குறித்து பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளதுள்ளார்.
அதில், பாகிஸ்தானில் நடக்கும் இது போன்ற இழி செயலை, காட்டுமிராண்டி தனத்தை இந்தியாவிலும் கொண்டு வரவே காங், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன என்பதை உணர்வோம் என தெரிவித்துள்ளார்.