கம்பளை – புப்புரஸ்ஸ ஐந்து ரோட்டு சந்தியில் முச்சக்கரவண்டியொன்று சுமார் 200 அடி பள்ளத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள், பன்விலதென்ன வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகச்சைகளுக்காக கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த முச்சக்கரவண்டி புப்புரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கிற்கு சென்று மீண்டும் பன்விலதென்ன திரும்பும் போதே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பன்விலதென்ன வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புப்புரஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.