Loading...
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணலாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த நான்கு சந்தேக நபர்களையும் 4 உழவு இயந்திரங்களையும் திருகோணமலை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும் இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 30 வயது உடையவர்கள் எனவும் இவர்கள் தொடர்பில் முன் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...