கம்பளை பகுதியில் மகாவலி ஆற்றில் மூழ்கி நேற்று இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
முகமட் நிஸார் முப்தி (21), முகமட் இக்ரம் (23) ஆகியோரே உயிரிழந்தனர்.
கம்பளை- கொத்மலை வீதியில், மொரகொல்ல பகுதியில் இருந்து ஆற்றில் குளிக்க சென்ற குழுவிலிருந்த இருவரே உயிரிழந்தனர். சுமார் 24 பேரைக் கொண்ட இளைஞர் குழு, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி, வாகனத்தில் குளிக்கச் சென்றுள்ளனர்.
நேற்று மதியம் அங்கு இவர்கள் சென்றபோது, ஏற்கனவே ஆற்றில் பலர் குளித்துக் கொண்டிருந்ததால், ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். சிலர் மூங்கில் தடிகளின் உதவியுடன் ஆற்றைக்கடந்து மறுபக்கம் செல்ல முயன்றபோது, ஒரு இளைஞன் ஆற்றில் மூழ்கியுள்ளார். அவரை மீட்க முயன்றவரும் மூழ்கியுள்ளார்.
இது குறித்து பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்தில் நடத்திய தேடுதலில் மாலையளவில் இருவரது உடல்களும் மீட்கப்பட்டன.
கம்பளை வைத்தியசாலையில் பிரதேச பரிசோதனைகளிற்காக உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.