இந்தியாவின் மராட்டிய மாநிலம் வர்தா பகுதியில் காதலை ஏற்க மறுத்ததால் தீ வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
24 வயதான கல்லூரி விரிவுரையாளரான அங்கிதாவுக்கு 40% தீக்காயம் ஏற்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக உயிருக்கு போராடி வந்த அங்கிதா பிகட் மரணமடைந்துள்ளார்.
அங்கிதாவுக்கு தீ வைத்த இளைஞருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளதகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விக்கி நக்ரால் என்ற அந்த நபர் தன்னை பின் தொடர்ந்து வந்ததை அங்கிதா பிகட் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளார்.
அதனால் கோபமடைந்த சந்தேக நபர் பெட்ரோலுடன் சென்று அங்கிதா பிகட் மீது அதனை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அங்கிதா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அங்கிதவின் முகம் மற்றும் தலைப் பகுதிகளில் ஆழமான தீக்காயங்கள் ஏற்பட்டதுடன் அவரது உள்ளுறுப்புகளும் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு தலைக்காதல் விவகாரத்தில் தீ வைக்கப்பட்ட கல்லூரி பேராசிரியர் மரணம் அடைந்ததை அடுத்து, குற்றவாளியின் வீடு மற்றும் உறவினர் வீடுகள் என்பன சூறையாடப்பட்டன.
இந்நிலையில் அங்கிதா பிகட் மீது தீ வைத்த இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.