கல்முனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தை அண்டிய பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் ஒன்றினை அடுத்து இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் கல்முனை பகுதியை சேர்ந்த இருவர் படுகாயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.