திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 6ம் கட்டை பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயனன் வளாகத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு வேளையே இவர் ஆலய வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தற்கொலை செய்து கொண்டவர் 19 வயதுடையவர் எனவும் இவர் இந்தியாவின் ஆந்திரா பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர் எனவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 06 ஆம் திகதி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோயில் வளாகத்தினுள்ளே பூசகர்களுக்கென வழங்கப்பட்டுள்ள வீட்டிலேயே மேற்படி தற்கொலையானது நிகழ்ந்துள்ளது எனவும் தற்போது சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்தாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நிலாவெளி பொலிஸார் மேற்கொள்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.