வவுனியா வைரவபுளியங்குளம், குருமன்காடு, பூங்கா வீதிகளில் மாலை வேளைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களை பயமுறுத்தும் பாணியில் இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று போக்குவரத்து பொலிசாரால் வழிமறிக்கப்பட்டு அவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை சட்ட மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில்,
வவுனியாவில் பல வீதிகளில் இளைஞர்களினால் செலுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் அதிகவேகத்துடனும் பொதுமக்கள், மாணவர்களை அச்சுறுத்தும் சத்தங்களுடனும் செலுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து குறித்த பகுதிகளில் போக்குவரத்துக் கடமைகளை மேற்கொண்டு வரும் போக்குவரத்துப் பொலிசார் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய நான்கு இளைஞர்களுடைய மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியதுடன் அவர்களுக்கு எதிராக நாளைய தினம் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக போக்குவரத்து பொலிசாரால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொதுமக்கள் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் மேலும் தெரிவித்துள்ளார்.