கொரோனா வைரஸ் பரவுவதால் ஜப்பானின் யொகோஹாமா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள டயமன் பிரின்ஸ் கப்பலில் இலங்கையைச் சேர்ந்த இருவரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
56 நாடுகளைச் சேர்ந்த 3700 பயணிகளுடன் இந்த டயமன் பிரின்ஸ் கப்பல் யொகோஹாமா துறைமுகத்தில் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் பயணித்தவர்களில் 135 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து கப்பலில் பயணித்த ஏனையவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த கப்பலில் மேலும் 65 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.