நீதிபதி கிஹான் மீது பிலாபிட்டிய தொடர்பான விடயத்தில் சட்ட நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பிலேயே இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் நீதிபதி கிஹான் பிலாபிட்டியவை கைது செய்யும் உத்தரவை நீதிமன்றில் பெறுமாறு சட்டமா அதிபர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.
எனினும் அதனை பதில் பொலிஸ்மா அதிபர் மேற்கொள்ளவில்லை. இதனை கண்டித்துள்ள சட்ட மா அதிபர் டப்புள்ள டி லிவேரா உடனடியாக தமது உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுள்ளார்.
இதேவேளை கிஹான் பிலபிட்டிய ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட உரையாடலில் நீதிபதி மீது குற்றம் இல்லை எனவும், எனவே அவரை கைது செய்ய கூறிய சட்டமா அதிபரிடம் விளக்கம் கோரவேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
இதன் அடிப்படையில் சட்டமா அதிபரும் சபாநாயகரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.