பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் கவின் மற்றும் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பு இலங்கையில், ஒரு செய்தி சேனலில் நியூஸ் வாசிப்பவராக பணியாற்றினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா கலந்து கொண்ட போது அவருக்கு லாஸ்லியா ஆர்மி என்று ரசிகர்கள் கூட்டம் இருந்தது, இருந்தும் வருகிறது.
பிரபல நாளிதழில், சின்னத்திரையில் மக்களிடையே அதிக பிரபலம் அடைந்தவர்கள் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அதில் லாஸ்லியா இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
தற்போது, கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் ஃபிரெண்ட்ஷிப் படம் மூலம் ஹீரோயின் ஆகியுள்ளார். இதையடுத்து அவர் ஆரி நடிக்கும் சஸ்பென்ஸ் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
அந்த படத்தில் லோஸ்லியா, ஸ்ருஷ்டி டாங்கே என்று இரண்டு ஹீரோயின்கள்.இந்நிலையில், விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த லாஸ்லியா ஸ்லீவ்லெஸ் உடையில் தோன்றி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.