டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது குறித்து அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி புதிய அரசியலுக்கான அடையாளம் என்று அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 8 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை (செவ்வாய்க்கிழமை) 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 63 இடங்களிலும்., பாஜக 7 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
டெல்லியில் ஆட்சி அமைக்க, அந்த மாநில சட்டப்பரேவையில் 36 எம்எல்ஏக்களின் பலம் தேவையென்ற நிலையில், ஆம் ஆத்மி 63 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.