தமிழகத்தில் பெற்றோரே தங்களது 11 மாத குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் அழுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அமல்ராஜ்.
கடந்த 5ஆம் திகதி அமல்ராஜின் 11 மாத ஆண்குழந்தையின் சடலம் வீட்டிலுள்ள தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது.
அமல்ராஜ் தான் குழந்தையை கொன்றதாக அவனது மனைவி சுஷ்மிதா (18) தந்தையுடன் சென்று பொலிசில் புகாரளித்துள்ளார்.
விசாரணையில் குழந்தையின் பிறப்பு மீது சந்தேகம் கொண்டு பெற்ற தாய் உட்பட ஒரு குடும்பமே சேர்ந்து அந்த பிஞ்சுக் குழந்தையைக் கொன்றது தெரியவந்துள்ளது. சுஷ்மிதா கடந்த 2018ல் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அமல்ராஜுடன் பழக்கம் ஏற்பட்டது.
இதன் மூலம் கர்ப்பமான சுஷ்மிதா 7 மாத கர்ப்பிணியாக இருந்தபோது உறவினர்கள் பார்த்து இருவருக்கும் திருமணம் செய்துவைத்துள்ளனர். இரு மாதங்களில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
அமல்ராஜின் மனைவிக்கு அவரது மாமன் மகன் ஒருவனோடு ஏற்கனவே பழக்கம் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், குழந்தை தன்னுடையது இல்லை என்று கூறி அமல்ராஜ் புறக்கணித்து வந்துள்ளான். அவனுடைய பெற்றோரும் குழந்தையை தூக்கவோ, பரமாரிக்கவோ மறுத்து புறக்கணித்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் குழந்தையை கொன்றுவிட்டால் நமக்குள் பின்னாளில் பிரச்சனை வராது என அமல்ராஜ் மனைவிக்கு யோசனை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதை ஏற்று கொண்ட சுஷ்மிதா தண்ணீர் தொட்டியில் குழந்தையின் தலையை அழுத்தி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் இருந்து மகளை காப்பாற்ற எண்ணிய சூசை மாணிக்கம், மருமகன் மீது பழியைப் போட்டு தப்பிக்க முயன்று அவரும் சிக்கியுள்ளார்.
தற்போது சுஷ்மிதா, அமல்ராஜ், சூசை மாணிக்கம், அமல்ராஜுவின் பெற்றோரான மரிய லூகாஸ், விமலா என 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயது பூர்த்தியடைவதற்கு முன்னரே சுஷ்மிதாவை திருமணம் செய்ததால் அமல்ராஜ் மீது போக்சோ சட்டமும் பாய்ந்திருக்கிறது.