Loading...
முந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் சாப்பிட்டு விட வேண்டும்.
இல்லையெனில் இந்த முந்திரிப் பழமானது உடனே அழுகி விடும்.
முந்திரிப் பழத்தின் ஜூஸானது பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது.
Loading...
மற்ற பழங்களை போல முந்திரிப் பழத்தை சாதரணமாக சாப்பிட முடியாது. ஏனெனில் இந்த பழமானது, நமது தொண்டையில் கரகரப்பை ஏற்படுத்திவிடும்.
இதனால் இந்த பழத்தை வேகவைத்து அல்லது உப்பு நீரில் ஊற வைத்து சாப்பிட வேண்டும்.
முந்திரி பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- முந்திரிப் பழத்தில் ஆரோக்கியமான சத்துக்கள், புரோட்டீன், பீட்டா-கரோட்டீன், டானின், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது.
- நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் மூலம் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- ஆரஞ்சு பழத்தை விட விட்டமின் C சத்துக்கள் அதிகமாக முந்திரிப் பழத்தில் உள்ளதால், விட்டமின் C குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து நம்மை விடுபடச் செய்கிறது.
- முந்திரிப் பழமானது, நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்சனைகள் மற்றும் நகங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- டானின் என்னும் வேதிப்பொருள் முந்திரிப் பழத்தில் இருப்பதால், இது கிருமி நாசினியாக செயல்படுகிறது. எனவே இந்த பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற பதிப்பு மிக்க பொருட்களை தயாரிக்கப் பயன்படுத்தப் படுகிறது.
- முந்திரிப் பருப்பில் விட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், இது புற்றுநோய், கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், ஒற்
Loading...