இளம்பெண் ஒருவர், வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய வந்த ஆணின் ஆண்குறியை வெட்டி துண்டாக்கிய சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானில், பாலியல் பலாத்காரம் செய்ய காமுகன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்துள்ளான். அப்போது அந்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மேலும், பலாத்காரம் செய்வதற்காக அந்த பெண்ணை தாக்கியதாக, அவர் தெரிவித்துள்ளார்.
25 வயது கொண்ட அந்த பெண், அந்த காமுகன் கற்பழிக்க வந்த நேரத்தில் உடனடியாக சமையலறைக்குள், விரைந்து ஓடி தன்னை கற்பழிக்க வந்த ஆணின் ஆண்குறியை வெட்டி இருக்கின்றார்.
இதனால், வலி தாங்க முடியாமல் அலறி துடித்த 28 வயது நபர், அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து, காவல்துறையினர் விசாரணையில், இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்கனவே காதலித்துள்ளனர். இப்போது, அவர் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள போவதால் ஆத்திரத்தில் பெண் இவ்வாறு செய்திருக்கலாம். என தெரிவித்துள்ளார்.