மட்டக்களப்பு மாவட்டத்திலும் இளைஞர் பாராளுமன்றத்திற்கான வேட்புமனுக்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை அதிகளவான இளைஞர் யுவதிகளுடன் வேட்புமனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்தமை அவதானிக்க முடிந்தது.
உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிமனை உதவிப் பணிப்பளர் கே.நந்ததிலக்க, தேசிய சம்மேளனத்தின் பிரதிநிதி ரி.விமல்ராஜ், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.கலாராணி, தகவல் நிலைய உத்தியோகஸ்த்தர் ஏ.எம்.அனிபா, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதி பி.சஜந்தன், மட்டக்களப்பு மாவட்ட சேவை உத்தியோகஸ்த்தர் ஏ.நிஷாந்தி ஆகிய உத்தியோகஸ்த்தர் அடங்கலான குழு வேட்புமனுதாக்கல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பதின் நான்கு பிரதேச செயலகங்களைச் சார்ந்த முந்நூற்று நாற்பத்து ஐந்து கிராம சேவகர் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இளைஞர் கழகங்களைச் சார்ந்த இளைஞர் யுவதிகளும் இத்தேர்தலில் வேட்பாளர்களாக வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும். இதில் வேட்பாளர்களுக்கான வயதெல்லை 18 முதல் 27 வயதிற்குட்பட்ட இளைஞர் கழகங்கள் அல்லாதோர் தேர்தலில் போட்டியிட முடியும்.
அதேவேளை இளைஞர் கழகங்களுக்கான வயதெல்லை 15 முதல் 29 வயதிற்குட்பட்ட கழக உறுப்பினர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுவர். இத்தேர்தலில் 18 முதல் 29 வரையான சகல மாவட்டத்தின் சகல இளைஞர்களும் வாக்களிப்பதற்கு தகுதி வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கென 1979ம் ஆண்டு ஒன்பதாம் இலக்க இளைஞர் சேவைகள் சட்டத்தின் நோக்கங்களை அடைதல் எனும் சட்டத்திற் கூடாக இளைஞர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பானது நிதி மற்றும் நியாயமான ஒரு சமூகத்தின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து குடிமக்களுக்கு கல்வி கற்பித்தல் தேசிய சர்வதேச பொருளாதார சமூக அரசியல் கலாசார சூழலினை சரியான முறையில் பேணுவதற்கான ஒரு ஆளுமைமிக்க இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கிலே இச்செயற்பாடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இத் தேர்தல் வேட்புமனுவானது மு.ப 10.00 மணிமுதல் பி.ப 3.30 மணிவரை நடைபெற்று வருகின்றது. இதேபோல் புதன்கிழமையும் நடைபெறும்.
இலங்கையில் 2020ம் ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்திற்கான ஒவ்வொரு பிரதேச செயகத்திலிருந்தும் 334 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர். அதனைத் தவிரவும் உயர் கல்வி மற்றும் பிறதுறைகள் சார்ந்த பிரதிநிதிகள் இருபத்திரண்டு பேர்கள் பிறிதொரு தினத்தில் தேர்தல் மூலமாக 22 பேர் தெரிவு செய்யப்படுவர்.
மொத்தம் 356 பிரதிநிதிகள் இப்பாரளுமன்றத்தை பிரதிநிதித்துவப் படுத்துவர். இதில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என முக்கியதுறைகளுக்கான அமைச்சுப் பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.