Loading...
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,110 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது என தகவல்கள் வெளியாகின. எனினும், உகானில் இந்த வைரஸ் அதிக பாதிப்பு ஏற்படுத்தியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
Loading...
நேற்று 94 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோன்று 1,638 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் 44,200க்கும் கூடுதலான பேருக்கு சீனா முழுவதும் வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
Loading...