Loading...
குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் பலியாகினர்.
மொனராகலை – பிபில வீதியின் 15 ஆம் கட்டை பகுதியில் உந்துருளி ஒன்றும் கெப் ரக வாகனமொன்றும் மோதி ஏற்படட விபத்தில் 38 வயதுடைய ஒருவர் பலியானார்.
இதற்கிடையில் மொனராகலை பொது மருத்துவமனைக்கு முன்பாக உந்துருளி ஒன்றில் பயணித்த ஒருவர் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
Loading...
இதனை அடுத்து பாரவூர்தியில் சிக்குண்ட அவர் பலியானதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் குருணாகல் – மல்லவபிட்டி பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே பலியானார்.
இந்த விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை அந்தந்த பகுதி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Loading...