யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரையும், அவரது மனைவியையும் கொடூரமாக தாக்கி, வீட்டிலிருந்த நகை, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது
சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரும், அவரது வயோதிக மனைவியும் தனித்திருந்த வீட்டில் கொள்ளையர் கும்பல் ஒன்று இன்று அதிகாலை நுழைந்துள்ளது.
இந்நிலையில் கொள்ளையர்கள் சக்கர நாற்காலியில் நடமாடும் முதியவரின் தலையில் கொட்டனால் தாக்கியதில் அவர் தற்போது பேச முடியாத நிலையில் உள்ளார்.
அத்துடன் மூதாட்டி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவரது பற்கள் உடைந்ததுடன், முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பேச முடியாமலுள்ளதால் கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பற்றிய துல்லியமான விபரங்கள் பெறப்படுவதில் சிக்கல் உள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
எனினும், ஐந்து கொள்ளையர்கள் வந்ததாக அவர்கள் சைகை மூலம் தெரிவித்துள்ளனர்.
வயோதிப தம்பதிகளின் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், மகளொருவர் இலங்கைக்கு வந்து ஓரிரு தினங்களின் முன்னரே திரும்பிச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த கொள்ளச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.