உலகமெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இன்ஜினீயரிங் மாணவர் ஒருவர் புதிய மாஸ்க் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்.
சத்தியமங்கலம் அடுத்த திருநகர் காலனியை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மகன் விக்னேஷ்.
மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டதாரியான இவர் கோவையில் உள்ள தனியார் கார்பன்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.
இரண்டு ஆண்டுகளாக கோவையில் உள்ள தனியார் கார்பன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இதனால், கார்பன்ஸ் மீது அவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதன்விளைவாக பல ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் வீட்டில் இருந்தபடியே செய்து வந்துள்ளார்.
இதனால், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க மாஸ்க் அணுயும்படி சீன அரசு அறிவுறுத்தியது. இதனால் ஒரே நேரத்தில் அதிக மக்கள் மாஸ்க் வாங்க குவிந்ததால் மாஸ்க் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதையடுத்து, பென்சிலில் உள்ள கிராபெனின் என்னும் பொருளை வைத்து புதிய மாஸ்க் ஒன்றை விக்னேஷ் கண்டுபிடித்துள்ளார். பென்சிலில் உள்ள கிராபெனின் என்ற பொருளை நன்றாக பொடியாக்கி மாஸ்க் மீது தடவி அல்லது கண்ணாடி டேப் மூலமாக மாஸ்க் மீது வைத்தால், அதன் துகள்கள் மாஸ்க்கில் 0.142 என்.எம் அளவுக்கு மட்டுமே இருக்கும்.