உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும் சில வேளைகளில் கடவுளுக்கும் அது தெரியாமல் இருக்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலையகத்தில் நேற்று செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் பற்றி கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது காலம் தாழ்த்தப்படுவது குறித்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என செயற்குழு உறுப்பினர்கள் பிரதமரடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் கடவுளுக்குத்தான் தெரியும் சில வேளைகளில் கடவுளுக்கும் அது தெரிந்திருக்காது என பிரதமர் சிரித்துக் கொண்ட பதிலளித்துள்ளார் என கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.