இளையதளபதி விஜய் நடித்த ‘துப்பாக்கி’ மற்றும் ‘ஜில்லா’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களிலும் நாயகியாக நடித்த காஜல் அகர்வால், விஜய்யின் 61வது படத்திலும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது காஜல் அகர்வால் அஜித்துடன் ‘தல 57’ படத்திலும், சிரஞ்சீவியுடன் ‘கில்லாடி நம்பர் 150′ படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் 61’ படத்தின் நாயகி போட்டியில் காஜல் அகர்வால் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நயன்தாரா தான் நாயகி என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ‘தல 57’ படத்தின் தன்னுடைய பகுதி படப்பிடிப்பு முடிந்த பின்னரே காஜல் அகர்வால், விஜய் படத்தில் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.
இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் உள்ளது.
அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் ஆஸ்கார் நாயகன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.