Loading...
யாழ்.தெல்லிப்பளை பகுதியில் மருத்துவபீட இறுதி ஆண்டு மாணவன் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த மாணவன் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
31 வயதான ஏ.இந்திரன் , எனும் தெல்லிப்பளையைச் சேர்ந்த மருத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
Loading...
தெல்லிப்பளை பகுதியில் அவரது வீட்டிற்கு அண்மையில் பிரதான வீதியில் இருந்த வர்த்தக நிலையத்திற்கு சென்று திரும்பியபோது இரு உந்துருளியில் பயணித்த நால்வர் தலைக் கவசத்தினால் மாணவனின் தலையில் பலமாக தாக்கியுள்ளனர்.
இதன்காரணமாக மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...