சுவிட்சர்லாந்தின் Aargau மண்டலத்தில் சமூக வலைத்தளத்தில் கிண்டலுக்கு உள்ளானதால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி தொடர்பில் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.
Aargau மண்டலத்தின் Spreitenbach பகுதியை சேர்ந்தவர் 13 வயதான Céline Pfister.
இவரே தமது சக மாணவர் ஒருவரால் மிரட்டலுக்கு இரையாக்கப்பட்டு, பின்னர் கிண்டலுக்கு உள்ளாகி, அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டவர்.
செலின் மீது தற்போது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் 14 வயது சிறுவனுக்கு ஈர்ப்பு இருந்துள்ளது. இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டுள்ளனர்.
ஒருகட்டத்தில் குறித்த சிறுவன், செலினை நிர்வாண புகைப்படங்கள் கேட்டு மிரட்டியுள்ளான்.
மீறினால் உரியவர்க்ளிடம் அம்பலப்படுத்துவதாகவும் எச்சரித்துள்ளான். இதற்கு பயந்து, செலின் ஆடைகளுடன் கூடிய ஆபாச புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் குறித்த சிறுவன் அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் பதிவேற்றி,
செலினின் உடல் அமைப்பை கிண்டல் செய்துள்ளான். மட்டுமின்றி அந்த புகைப்படங்களை பலரது பார்வைக்கும் அனுப்பியுள்ளான். அது செலின் பார்வைக்கும் வந்துள்ளது. இதில் மனமுடைந்த செலின், சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
செலினின் தற்கொலைக்கு காரணமான, தற்போது 19 வயதாகும் அந்த நபர், தாம் ஒன்றும் கொலைகாரன் அல்ல எனவும்,
சிறார்களின் சண்டையில் அது நடந்துவிட்டது என்றும், பலரும் இதுபோன்ற சூழலில் உள்ளனர் எனவும், இருப்பினும் தன்னை மட்டுமே குற்றவாளி என விரல் நீட்டுவது வருத்தமளிப்பதாகவும்,
நடந்தவற்றிற்கு முழு பொறுப்பேற்றுக் கொள்வதாகவும், ஆனால் தாம் ஒரு புதிய வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செலின் தற்கொலைக்கு பின்னர் இருவர் குற்றவாளிகள் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டனர்.
இருப்பினும், செலின் தற்கொலை செய்து கொண்டதற்கும் கேலிக்கு உள்ளானதற்கும் தொடர்பு இல்லை என்றே அவர்களின் தரப்பு வாதிட்டு வருகிறது.