Loading...
நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சினைகளுள் தலைவலியும் ஒன்றாகும்.
தலைவலி வந்துவிட்டாலே போதும் நம்மை எந்த வேலையையும் செய்யவிடமால் பாடாய்படுத்தும்.
Loading...
இதிலிருந்து விடுபட யோகசானங்கள் உதவிபுரிகின்றது. அதில் உத்தானபாத ஆசனம்அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்குகின்றது.
அந்தவகையில் தற்போது இந்த ஆசனத்தை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
- விரிப்பில் நேராக படுக்கவும். இரு கால்களை சேர்க்கவும். கைகளை விரல்கள் குப்புறப்படுமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைக்கவும்.
- மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும்.
- மூச்சை அடக்கி பத்துவிநாடிகள் இருக்கவும் பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும். ஒரு நிமிடம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.
- இதன் பலன்கள் ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையிலுள்ள அத்தனை நாடி நரம்புகளும் நன்றாகத் தூண்டப்பெற்று சிறப்பாக இயங்கும்.
- வாயு தொந்தரவு நீங்கும். அஜீரண கோளாறினாலும், மலச்சிக்கலினாலும் வரும் தலைவலி நீக்க இது ஒரு நல்ல ஆசனம்.
Loading...