Loading...
தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பிப் பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பைத் தனது வாயால் சரியாகப் பற்றி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
Loading...
தாய்ப்பால் குடித்த குழந்தைக்குத் உடனே தண்ணீர் கொடுக்க கூடாது. குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பிப் பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.
குழந்தையைப் படுக்க வைக்கும் போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக் கொள்ள வேண்டும்.
Loading...