இலங்கையில் சாரதி அனுமதி பத்திரம் பெறும் நடவடிக்கை மேலும் இலகு படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 3 மணி நேரத்திற்குள் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இத தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
புதிதாக சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்காகவும், புதுப்பிப்பதற்காகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் மக்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையிலேயே, போக்குவரத்து திணைக்களத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட திடீர் விஜயத்தை அடுத்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் குறைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புதிய திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.