எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித்தின் இதயம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து அன்னம் சின்னத்தில் களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த யோசனைக்கு அனைவரும் தமது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இதயம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததையடுத்து, கூட்டணியின் ஒற்றுமையை கருத்திற்கொண்டு எதிர்க் கட்சித் தலைவரினால் இந்த யோசனை முன்வைப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாசவை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து பேரும் ரணில் விக்ரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து பேரும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படும் ஏனைய கட்சிகளும் இந்த தீர்மானத்திற்கு தமது ஆதரவினை தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மந்துமபண்டார புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.